எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள்: சேலத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள்: சேலத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்திய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் .

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி சேலத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளையொட்டி சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு வேடியப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!