தீயணைப்புத்துறையில் தேர்ச்சி பெற்ற 83 வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை

தீயணைப்புத்துறையில் தேர்ச்சி பெற்ற 83 வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை
X

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணி துறையில் தேர்ச்சி பெற்ற 83 வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையில் தேர்ச்சி பெற்ற 83 வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு நடைபெற்ற எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வுகளில் சேலம் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 83 வீரர்களுக்கு, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்ட தீயணைப்பு மீட்பு துறை அலுவலர் வேலு மற்றும் உதவி அலுவலர் முருகேசன் ஆகியோர் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர் தீயணைப்பு வீரர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு சேலத்தில் மூன்று மாதம் தீயணைப்பு பயிற்சிகள் நடைபெற உள்ளது. 83 தீயணைப்பு வீரர்களில் ஒருவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது