சேலத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: 30,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: 30,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்.

சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் கல்வி தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் இன்று மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 19 ஆயிரத்து 809 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 213 முன்னணி நிறுவனத்தினர் பங்கேற்றனர். இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முகாமில் தேர்வானவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது