சேலத்தில் எரிந்த நிலையில் பிறந்த ஆண் சிசு: போலீசார் விசாரணை

சேலத்தில் எரிந்த நிலையில் பிறந்த ஆண் சிசு: போலீசார் விசாரணை
X

பச்சிளம் குழந்தையை எரிந்த நிலையில் மீட்டு  விசாரணை நடத்தும் காவல் துறையினர்.

சேலத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் சிசுவின் சடலம் எரிந்த நிலையில் மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சேலம் அமானி கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில்தெரு பகுதியில் சாக்கடை கால்வாயில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார் கால் பகுதி எரிந்த நிலையில் ஆண் குழந்தையின் சடலத்தை சாக்கடை கால்வாயில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யார் குழந்தையை குப்பையில் வைத்து எரித்தனர்? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!