அரசு அறிவித்த 3 மாத சிறப்பு ஊதியம் வழங்கக் கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு அறிவித்த 3 மாத சிறப்பு ஊதியம் வழங்கக் கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

 தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த மூன்று மாதம் சிறப்பு ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்று உள்ளாட்சித்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்

தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த மூன்று மாதம் சிறப்பு ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொகுப்பூதியம் மதிப்பூதியம் என்ற பெயரில் தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலை கைவிட வேண்டும், அனைத்து பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களை காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை அமல்படுத்த வேண்டும் ,

தூய்மை பணியாளர்களுக்கு எட்டு மணி நேர வேலையை அமல்படுத்திட வேண்டும், முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 3 மாத சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டு தமிழக உள்ளாட்சித்துறையை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!