சேலம் மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு
X

சேலம் மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு நடத்தி விட்டு வெளியே வந்தார்.

சேலம் மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சேலத்தில் மத்திய சிறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆய்வு முடித்து வெளியே வந்த சட்டத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது:-

தற்போது சேலம் மத்திய சிறையில் 1351 கைதிகள் உள்ளனர். பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளனர். எப்போதும் 800 கைதிகள் வரை மட்டுமே மத்திய சிறையில் இருக்கும் நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

சேலம் மத்திய சிறையில் 10 நாட்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.குறிப்பாக மத்திய சிறைக்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே மாவட்ட சிறைகளில் முழுமையாக பரிசோதனை பிறகு மத்திய சிறைக்கு அனுப்புகிறது சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பற்றிய அச்சமும் பயமும் தேவையில்லை. வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் 34 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். சிறப்பு பரோல் கேட்டால் கொடுப்பதில் பிரச்சினையில்லை, முன் விடுதலை குறித்து அரசு சில நிபந்தனைகள் விதித்துள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை குறித்து பரிசீலிக்கப்படும்.

நன்னடத்தை சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசாணை வெளியிடப்பட இருப்பதால் முதற்கட்டமாக கடலூர், வேலூர் கோப்புகள் அனுப்பப்பட்டு முதலமைச்சர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சர் பார்த்தபிறகு ஆளுநருக்கு அனுப்பப்படும். ஆளுநரின் அனுமதி பெற்ற பிறகு விடுதலை செய்யப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறையில் நடந்த மோசடி குறித்த கேள்விக்கு,மோசடிகளுக்கு எப்பொழுதும் தி.மு.க. அரசு துணை போகாது, மோசடிகள் இருந்தால் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2.5கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை,மோசடி நடைபெற்றதற்கான குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் சிறைச்சாலையில் உள்ள நபர்களை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்பது குறித்து யார் புகார் அளித்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுத்து முறையான விசாரணை நடத்தப்படும் என்ற அவர், 7 பேர் விடுதலை குறித்து நளினி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் நல்ல முடிவை தரும் என்று எதிர்பார்க்கிறோம். மீண்டும் ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!