இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கிலேயே கருப்பர் கூட்டத்தினர்: அர்ஜுன் சம்பத்

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கிலேயே கருப்பர் கூட்டத்தினர்: அர்ஜுன்  சம்பத்
X

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கிலேயே கருப்பர் கூட்டத்தினர் பரப்பி வருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டியுள்ளார்.

சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழக அரசின் மஞ்சள் பை இயக்கத்தை வரவேற்பதாகவும், மஞ்சள் பையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதோடு அரசு 5 ஆயிரம் பணம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என்ற மு.க ஸ்டாலின் தற்போது முதல்வராக அதை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஈவேரா கொள்கைக்கு எதிராகவே போகி பண்டிகையைக் கொண்டாடி வருவதாக தெரிவித்த அர்ஜுன் சம்பத், இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கிலேயே கருப்பர் கூட்டத்தினர் அன்னபூரணி குறித்து யூடியூப், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் தீவிரமாகப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்