வேலைதேடும் இளைஞர்கள் சிறு தொழிலை தொடங்க முன்வர வேண்டும்: சேலம் ஆட்சியர்

வேலைதேடும் இளைஞர்கள் சிறு தொழிலை தொடங்க முன்வர வேண்டும்: சேலம்  ஆட்சியர்
X

சிறப்பு விற்பனையை  திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்ட சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

வேலைதேடும் இளைஞர்கள் ஏதாவது ஒரு சிறு தொழிலை தொடங்க முன்வர வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில் சேலம் கடைவீதி பகுதியில் சிறப்பு விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கதர் மற்றும் கிராமிய பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

வரும் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு விற்பனையை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், புதிதாக வேலை தேடி செல்லும் இளைஞர்கள் ஏதாவது ஒரு சிறு தொழில்களை தொடங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!