சேலத்தில் 11 சவரன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் 11 சவரன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

பைல் படம்.

சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் 11 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் நடந்து சென்ற சுகுணா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 5.5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதேபோல் சீரங்கபாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சாந்தி என்பவரிடம் 5.5 பவுன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

இவ்விரு சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவை கொண்டு தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடைபெற்ற இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்