சேலத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்

சேலத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
X

 சேலத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எல்ஐசி ஊழியர்கள் மற்றும் பல்வேறு தொழிற் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் நாடு முழுவதும் எல்ஐசி பங்கு விற்பனையை கண்டித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சேலம் காந்திரோடு பகுதியில் அமைந்துள்ள எல்ஐசியின் மண்டல அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட கோரி கோஷங்களை எழுப்பினர்.

ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை திட்டமிட்டபடி வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!