வனப் பகுதிகளை அதிகரிக்க தனி நிபுணர் குழு: வனத்துறை அமைச்சர் தகவல்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனப் பகுதிகளை அதிகரிக்க தனி நிபுணர் குழு மூலம், மண் சார்ந்த மரங்களை வனப் பகுதிகள் முழுவதும் அதிகரிக்க செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில்வன அலுவலர்களுக்கான மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் வனத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் வனப்பகுதிகளை 33 சதவீதமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு விலங்குகள் பாதிப்பால் 2922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அதற்கான இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை.
ஆனால் இந்த ஆண்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வனப் பகுதிகளை அதிகரிக்க தனி நிபுணர் குழு மூலம் மண் சார்ந்த மரங்களை வனப் பகுதிகள் முழுவதும் அதிகரிக்க செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் வன விலங்குகளுக்கு தேவையான உணவு முறைக்கு ஏற்ப தேவையான உணவுப்பயிர்கள் பயிரிடப்படும் என்றும் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் குழந்தைகள் பொழுதுபோக்கு மையமாக பயன்படுத்தும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பிரச்னை காரணமாக சுற்றுலா மேம்படுத்தும் பணி தளங்களை மேம்படுத்தும் பணி தொய்வு ஏற்பட்டிருந்தது தற்பொழுது பிரச்னை குறைந்த நிலையில் பணிகள் விரைவாக விரைவாக செயல்படுத்த செயல்படுத்தப்படும். எனவும் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu