சேலம் மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே முதலிடம்

சேலம் மாவட்டத்தில்  ஆண்களை விட பெண் வாக்காளர்களே முதலிடம்
X

11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டார்.

சேலம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 15,13,360; பெண் வாக்காளர்கள் 15,35,240 இதர வாக்காளர்கள் 224 என மொத்தம் 30,48,824 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 49,174 வாக்காளரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது . மேலும் 17,953 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது . இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயது நிரம்பிய வாக்காளர்கள் 22,134 சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் தற்போது 31,221 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

இதனிடையே சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் சேலம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையிலும் பெண் வாக்காளர்களே முன்னிலையில் உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!