சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை: நாடகமாடிய மனைவி

சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை: நாடகமாடிய மனைவி
X

கவிதா. 

சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு மனைவி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

சேலம் அன்னதானப்பட்டி மூணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவா(29), இவரது மனைவி கவிதா(25) இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜீவா கடந்த 16ஆம் தேதி வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானபட்டி காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பொங்கல் பண்டிகையின் போது மதுபாட்டிலை வாங்கி வைத்துக் கொண்டு, குடித்துக்கொண்டே இருந்ததால் உயிரிழந்ததாகவும், இனி எனது குழந்தைகளை நாம் எப்படி காப்பாற்றுவேன் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதையடுத்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜீவா மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக மனைவி கவிதாவை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அவரது செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார். அவர் யாரிடம் பேசுகிறார் என்பது குறித்து கண்காணித்து நிலையில், அன்னதானபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் சந்திரகலா மற்றும் போலீசார் கவிதாவையும், ராஜாவை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் விசாரணையில் இருவரும் சேர்ந்து கணவர் ஜீவாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும், இதனை தெரிந்துகொண்ட கணவர் கண்டித்த நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியதாக மனைவி கவிதா தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்த ஜீவாவை தலையணையால் அழுத்தி கொலை செய்ததாக இருவரும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!