/* */

இல்லம் தேடி கல்வி திட்ட வாகன விழிப்புணர்வு: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த வாகன விழிப்புணர்வு மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி திட்ட வாகன  விழிப்புணர்வு: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
X

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த வாகன விழிப்புணர்வு மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழக முழுவதும் கொரானா நோய்த்தொற்று காலத்தில் இடைநின்ற குழந்தைகளுக்கும் மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சென்னையில் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவில் கலை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த கலைக்குழுவினர் மாவட்டந்தோறும் வீடு தேடி கல்வி திட்டத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கலைக்குழு துவக்க நிகழ்ச்சி மற்றும் வாகன விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கலைக்குழுவின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

மேலும் கலைக்குழுவினர் தாரை தப்பட்டை கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இல்லம் தேடி கல்வித்திட்ட பயன்பாட்டை குறித்து எடுத்துரைத்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இந்த கலைக்குழுவினர் கிராமங்கள் குக்கிராமங்கள் மற்றும் ஏழை எளியோர் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கு கலைக்குழுவின் மூலம் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைக்க உள்ளது. இதற்காக குழுவினருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  4. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  5. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  7. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  10. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...