அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சேலத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சேலத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு சேலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் லாவண்யாவின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு மாநில அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ai future project