சேலத்தில் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டு ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி சேலத்தில் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு கைத்தறி பட்டு ஜவுளிக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி சேலத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, சிந்தாமணியூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜவுளி ரகங்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை வரும் ஜனவரி முதல் 12 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறி மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டு ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என போராட்டத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business