நாளை முழு ஊரடங்கு: சேலத்தில் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைகளில் அலைமோதிய கூட்டம்

நாளை முழு ஊரடங்கு: சேலத்தில் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைகளில் அலைமோதிய கூட்டம்
X

சேலம் உழவர் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்.

நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சேலத்தில் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி நாளைய தினம் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்க அதிகளவில் குவிந்தனர்.

காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாத பட்சத்திலும் கூட பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்க சமூக இடைவெளியை மறந்து ஒருவரை ஒருவர் முந்தி அடித்ததால் அப்பகுதிகளில் நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது.

ஆனால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதின.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!