சேலத்தில் கோடி கணக்கில் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார்

சேலத்தில் கோடி கணக்கில் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார்
X

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பாதிக்கப்பட்டவர்கள்.

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கோடி கணக்கில் மோசடி செய்தவர்களை கைது செய்ய பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்தனர்.

சேலம் தமிழ் சங்கம் சாலையில் எக்ஸ்போர்ட் நிறுவனம் நடத்திவரும் ஸ்ரீஷா சிங் மற்றும் ஜெயா சமீர் பதான் ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்தை 6 மாதத்தில் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பலரிடம் சுமார் நூறு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மோசடியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பலரிடம் இந்த கும்பல் தங்களது கைவரிசையை காட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் பேராசையில் பலர் லட்சம் லட்சமாக இப்படி பணத்தை இழந்து கொண்டுதான் இருக்கின்றனர். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற மோசடி சம்பவங்களை தடுக்க முடியும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!