சேலத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு

சேலத்தில் 19 மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சேலத்தில் 19 மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகளில் 699 கவுன்சிலர்கள் பதவிகளுக்கு வரும் 19ஆம் தேதி 1519 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு வாக்குப்பதிவு அலுவலர்களாக 7,328 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று 19 மையங்களில் நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 4 மய்யங்களிலும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 15 மய்யங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இப்பயிற்சியில் வாக்குப்பதிவு தொடர்பாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் குறித்தும் அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu