சேலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம்: வேட்பாளர்கள் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு
சேலம் 5 வது கோட்டத்தில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் செல்வி செல்வன் பெரிய புதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், 6 நகராட்சியில் உள்ள 165 வார்டுகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 474 வார்டுகள் என மொத்தம் 695 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 206 பேர் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், சுயேச்சை என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பாக நடந்து வந்த பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதையொட்டி இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் சேலம் 5 ஆவது கோட்டத்தில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் செல்வி செல்வன் பெரிய புதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளருக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குழாய் சின்னம் பொறிக்கப்பட்ட டீ சர்ட்டுகளை அணிந்தவாறு வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மருதபிள்ளை பூ மார்க்கெட் பகுதியில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். வேட்பாளர் டீ போடுவதை பார்த்த அங்கிருந்த இளம் பெண்கள் சிலர் வேட்பாளருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல் சேலம் மாநகராட்சி 13 வது கோட்டத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நாராயணன் எம்.டி.எஸ் நகர் பகுதியில் தனது சின்னம் முரசை கொட்டியவாரு வீடு வீடாக சென்று முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu