சேலம் மாநகராட்சியில் ஒரே பெயரில் 4 பெண் வேட்பாளர்கள்: தேர்தல் களத்தில் சுவாரசியம்

சேலம் மாநகராட்சியில் ஒரே பெயரில் 4 பெண் வேட்பாளர்கள்: தேர்தல் களத்தில் சுவாரசியம்
X
சேலம் மாநகராட்சியில் இரண்டு வார்டுகளில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் களத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக,அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 10 மற்றும் 54 வது வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே பெயர் கொண்டவர்களாக உள்ளனர். 10 ஆவது வார்டு திமுக சார்பில் ஆர்.சாந்தி, அதிமுக சார்பில் ஆர்.சாந்தியும், அதேபோன்று 54 வது வார்டில் திமுக சார்பில் ஜி.கனிமொழி, அதிமுக சார்பில் எஸ். கனிமொழியும் போட்டிருக்கின்றனர்.

ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாகவே தேர்தல்களின்போது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட சுயேச்சைகள் பலரும் போட்டியிட்டு வாக்காளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். தற்போது ஒரே வார்டில் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே பெயர் கொண்டவர்களாக இடம் பெற்றுள்ளனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா