மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

சேலம் மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை 120 அடியை எட்டும்போது கூடுதலாக வரும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த ஆண்டு தமிழக அரசு 565 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டு பகுதியளவில் முடிந்துள்ள இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மேட்டூர் சரபங்கா வெள்ள உபரிநீர் ஏற்ற திட்டத்தின் மூலமாக உடனடியாக விரைந்து 100 ஏரிகளை நிரப்ப வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காவிரி உபரி நீர் நடவடிக்கைக்குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இத்திட்டத்தை கொண்டு வரும் நிலையில் நங்கவள்ளி, ஓமலூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், எடப்பாடி, சங்ககிரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்புவதால் உபரிநீர் அரை டிஎம்சி அளவிற்கு சேமிக்கப்படும்.

இத்திட்டம் மூலம் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாகவும், நிலத்தடி நீர் பாசனத்தின் வழியில் பாசன வசதி பெற்று பயன்பெறும். எனவே உடனடியாக மேட்டூர் சரபங்கா வெள்ள உபரிநீர் இத்திட்டத்தின் மூலமாக உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!