சேலம் : மின்னணு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

சேலம் : மின்னணு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு
X

உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

சேலத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகள் என, மொத்தம் 38 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், நாளை நடக்கிறது. 695 உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்ய, 1,519 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுபாட்டு கருவிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story