சேலம் வந்த அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு
சேலம் வந்த அலங்கார ஊர்தி.
மத்திய அரசால் நிராகரிக்கபட்ட தமிழ்நாடு அரசின் சுதந்திர போராட்ட தியாகிகள் சிலைகள் கொண்ட அலங்கார ஊர்தி, தமிழகம் முழுவதும் காட்சிபடுத்தபடும் என்ற தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பிற்கு இணங்க, தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளான வஉசி, பாரதியார் உள்ளிட்டவர்களின் சிலைகளோடு, வஉசியின் பெருமையை உணர்த்தும் வகையில் வடிவமைக்கபட்ட அலங்கார வாகனம், இன்று காலை சேலம் வழியாக கோவை சென்றது. சேலம் மாநகரின் இந்த வாகனத்தை வரவேற்கும் விதமாக சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேள தாளம், தாரை தப்பட்டை, ஜெண்ட மேளம், இளைஞர்களின் நடனம், குறவர் நடனம் என சேலம் மாநகரின் புறவழிச்சாலையான கொண்டாலாம்பட்டி பகுதியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அலங்கார வாகனம் சேலம் மாநகரை வந்து அடைந்ததும், பட்டாசுகள் வெடிக்கபட்டு, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் திமுகவினரும், மாவட்ட ஆட்சியர் பொறுப்பு கவிதா தலைமையில் அரசு அதிகாரிகளும், மலர் தூவி, அலங்கார ஊர்தியை வரவேற்றனர்.
தொடர்ந்து அலங்கார வாகனத்தை பொது மக்கள் பாரவைக்காக சிறிது நேரம் நிறுத்தி வைக்கபட்டதை தொடர்ந்து அங்கு குழந்தைகளோடு வந்த பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அலங்கார ஊர்தியை கண்டு களித்தனர். மேலும் பலரும் அலங்கார ஊர்தியோடு புகைப்படம் எடுத்து கொள்ளவும், செல்பி எடுத்து கொள்ளவும் ஆர்வத்தோடு வந்தனர். இதனை தொடர்ந்து அலங்கார் ஊர்தி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவைக்கு சென்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu