எல்ஐசி பங்குகள் விற்பனையை கைவிடக்கோரி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

எல்ஐசி பங்குகள் விற்பனையை கைவிடக்கோரி  ஊழியர்கள் தர்ணா போராட்டம்
X

எல்ஐசியின் பங்குகளை விற்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி சேலம் எல்ஐசி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்ஐசியின் பங்குகளை விற்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி எல்ஐசி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது.

காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சேலம் தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து இன்சூரன்ஸ் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் கூறும்போது, மத்திய அரசு துறைகள் அனைத்தையும் தனியார் மயமாக்கி வருகிறது. மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து அனைத்து துறைகளிலும் உள்ள தொழிற்சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் எல்ஐசியின் பங்குகளை விற்பதற்கான முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை கைவிட வேண்டும் இல்லையென்றால் பங்குச்சந்தை பட்டியல் வெளியிடும் நாளில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil