சேலம் சின்னதிருப்பதியில் மின்கசிவால் தீவிபத்து: டிவி எரிந்து சேதம்

சேலம் சின்னதிருப்பதியில் மின்கசிவால் தீவிபத்து: டிவி எரிந்து சேதம்
X

தீவிபத்தில் சாம்பலான டிவி.

சேலம் சின்னதிருப்பதியில் உள்ள வீடு ஒன்றில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் டிவி எரிந்து சேதமானது.

சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி விஜயலட்சுமி. இவரது வீட்டின் மேல்தளத்தில் வீடுகட்டும் பணிகள் நடப்பதால் இவர் கடந்த ஒரு மாதமாக உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த விஜயலட்சுமி, இன்று காலை புதிதாக கேபிள் இணைப்பு கொடுத்து டிவி பார்த்துள்ளார். இதனிடையே திடீரென மின்கசிவு ஏற்பட்டு டிவியில் இருந்து புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி வீட்டின் மின் இணைப்பை துண்டித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் டிவி மற்றும் டேபிள் தீப்பற்றி முழுமையாக எரிந்தது. அருகில் வேறு எந்த பொருட்களும் இல்லாததால் மேற்கொண்டு தீ பரவவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்து குறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story