சேலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்ட 45 சாய தொழில்சாலைகள் மூடல்

சேலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்ட 45 சாய தொழில்சாலைகள் மூடல்
X
சேலத்தில் செயல்பட்ட 45 சாய தொழில் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் ராஜா தகவல்

சேலத்தில் 90 சாயப்பட்டறைகளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்ட 45 சாய தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் சேலம் மாவட்டத்தில் நேற்றும், இன்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜவ்வரிசி ஆலை, மேட்டூர் அனல் மின் நிலையம், ஏற்காடு படகு இல்லம், பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆய்வு கூட்டம் நடத்தினர். இதில் குழுவின் தலைவர் ராஜா எம்எல்ஏ மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குழுவின் தலைவர் ராஜா கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சேகரிக்கப்பட்ட குறைபாடுகள் குறித்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்து அவை நிவர்த்தி செய்யப்படும் என்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள 90 சாய தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்ட 45 தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி பூங்கா அமைக்க கோரிக்கை வந்துள்ளதாகவும் இதுகுறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் ராஜா தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்