சேலம் : மதுபோதையில் மினி சரக்கு வாகனம் தாறுமாறாக ஓட்டியவர் கைது

சேலத்தில் விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்.
சேலம் மாநகரின் மைய பகுதியான 5 ரோடு அருகே அதிவேகத்தில் தாறுமாறாக ஓடிய மினி சரக்கு வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதோடு சாலையோரம் நடந்து சென்றவர் மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீதர் மற்றும் விஜயகுமார் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மேச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே நெஞ்சை பதை. பதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu