சேலத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது

சேலத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது
X

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர்.

தமிழக ஆளுநரை கண்டித்து சேலத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி மசோதாவை தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நீட் மசோதாவை சட்டபேரவைக்கு திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை கண்டித்து சேலத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!