கோவையில் வன்முறையை தூண்டிவிட திமுக முயற்சி: எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையில் குண்டர்களை வைத்து வன்முறையை தூண்டிவிட திமுக முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தங்கியுள்ள சமூக விரோதிகளை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் மக்களை சந்திக்க பயந்து முறைகேடாக தேர்தலில் வெற்றி பெற முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், கோவையில் போலிஸ் துணையோடு தி.மு.க.வினர் பணம் வினியோகம் செய்து வருவதாகவும் சாடினார். எனவே ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெறும்.கோவை அதிமுகவின் கோட்டை. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதிகார போதையில் அநாகரிகமாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.வாய் இருக்கிறது என்பதற்காக எதை பேசினால் நாங்களும் பேசுவோம் என்ற அவர், தேர்தல் ஆணையம் திமுகவின் கையாளகாவும், காவல்துறை ஏவல்துறையாகவும் செயல்படுகிறது. கோவை மட்டுமின்றி பல இடங்களில் இது போல நடக்கிறது. தில்லு முள்ளு செய்து திமுக வெற்றிபெறலாம் என நினைக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் மேற்கு வங்கத்தை போல சட்டமன்றத்தை முடக்குவோம் என நான் சொல்லவில்லை. பத்திரிக்கையில் வந்த செய்தியைதான் சொன்னேன். தவறான வழியில் ஒரு அரசாங்கம் செல்லும் போது பிற அரசுகளோடு ஒப்பிட்டு பேசுவது வழக்கம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu