இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய மோடி அரசாங்கம் தொடர்ந்து மக்கள் மீதும், வியாபாரிகள் மீதும் சுமையை அதிகரிக்கும் நிலையில், தற்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகை பரிசாக மக்களுக்கு வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உள்ளது என குற்றம்சாட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக சங்கம் சேலம் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!