வலிமை படம் வெளியிட தாமதம்: கண்ணாடியை உடைத்த அஜீத் ரசிகர்கள

வலிமை படம் வெளியிட தாமதம்: கண்ணாடியை உடைத்த  அஜீத் ரசிகர்கள
X

சேதமடைந்த சீலிங்.

வலிமை திரைப்பட காட்சிகள், சேலத்தில் திரையிட தாமதமானதால் அஜீத்குமார் ரசிகர்கள் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் 5 திரைகளில் திரையிடப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 1 மணி முதலே ரசிகர்கள் ஆர்வமுடன் திரைப்படம் பார்க்க உற்சாகத்துடன் வந்தனர். முதல் காட்சி அதிகாலை 4:00 மணிக்கு திரையிட வேண்டிய காட்சி ஒருமணி நேரம் வரை தாமதமானது. இதனால் ஆவேசமடைந்த கோபம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கின் டிக்கெட் கவுண்ட்டர் முன்பு ஃபால்சீலிங் மற்றும் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

இதேபோல் 7:30 மணிக்கு திரையிட வேண்டிய காட்சி 8 மணிக்கு திரையிடப்பட்டதால் அந்த காட்சிக்கு வந்து காத்திருந்த ரசிகர்களும் ஆவேசமடைந்து இதேபோன்று திரையரங்க வளாகத்தை சேதப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து உடனடியாக ரசிகர்கள் திரையரங்கிற்கு அனுமதிக்கப்பட்டதை அடுத்து இயல்புநிலை திரும்பியது. கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் திரையரங்கங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்குமார் படத்தைத் திரையில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்கம் முன்பாக பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!