பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தபடும் தியாகிகளின் அலங்கார ஊர்தி

பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தபடும் தியாகிகளின் அலங்கார ஊர்தி
X

அலங்கார ஊர்தி.

சேலம் மாநகருக்கு வந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை பறை சாற்றும் அலங்கார ஊர்தி 2 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தபட்டுள்ளது.

மத்திய அரசால் நிராகரிக்கபட்ட தமிழ்நாடு அரசின் சுதந்திர போராட்ட தியாகிகள் சிலைகள் கொண்ட அலங்கார ஊர்தி, தமிழகம் முழுவதும் காட்சிபடுத்தபடும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளான வஉசி, பாரதியார் உள்ளிட்டவர்களின் சிலைகளோடு, வஉசியின் பெருமையை உணர்த்தும் வகையில் வடிவமைக்கபட்ட அலங்கார வாகனம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறது.

இந்த நிலையில் இன்று சேலம் வந்த அலங்கார ஊர்திகள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேலம் மாநகராட்சி திடலில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அலங்கார ஊர்தியினை பார்வையிட்டு சிலம்பாட்டம், பரதநாட்டியம், இசை வாத்தியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும் பலரும் அலங்கார ஊர்தியோடு புகைப்படம் எடுத்து கொள்ளவும், செல்பி எடுத்து கொள்ளவும் ஆர்வத்தோடு வந்தனர்.

இந்த அலங்கார ஊர்தி இன்று மற்றும் நாளை இரு தினங்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!