5 பேரை பலிகொண்ட சிலிண்டர் விபத்து: அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வை

5 பேரை பலிகொண்ட சிலிண்டர் விபத்து: அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வை
X

சேலம் சிலிண்டர் விபத்து நடந்த இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார்.

சேலம் சிலிண்டர் விபத்து நடந்த இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார்.

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கர் கோவில் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜலட்சுமி என்ற மூதாட்டி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த நான்கு பேர் சடலமாக மீட்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை தமிழக நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு எரிவாயு கசிவு ஏற்பட்டதால் நேர்ந்த விபத்தில் நான்கு வீடுகள் சேதம் அடைந்து 5 பேர் இறந்துள்ளனர்.13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இடிபாட்டில் வேறு யாரும் சிக்கி உள்ளனரா? என பார்க்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து முதலமைச்சருக்கு தெரிவித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

வணிக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி பலகாரம் செய்த போது விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் வணிக எரிவாயு சிலிண்டர்களை வீடுகளில் வைத்து பலகாரம் செய்வதை கண்காணித்து அதைத் தடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வணிக எரிவாயு சிலிண்டர் உரிய பாதுகாப்பு இல்லாமல் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தால் அகற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் இதுபோன்ற கமர்சியல் சிலிண்டர்கள் வீடுகளில் யாரும் பயன்படுத்துகிறார்களா? என்று பார்க்கவும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகளிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.

Tags

Next Story