சாலையோர உணவகத்திற்கு காய்கறி வெட்டி தேமுதிக வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு

சாலையோர உணவகத்திற்கு காய்கறி வெட்டி தேமுதிக வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு
X

ரோட்டுக்கடை உணவகத்திற்கு காய்கறி வெட்டி நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர்.

சேலம் மாநகராட்சியில் கட்டிட வேலை செய்தும், ரோட்டுக்கடை உணவகத்திற்கு காய்கறி வெட்டியும் தேமுதிக வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக, அதிமுக, பாமக தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சியில் 13 வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாராயணன், இன்று மத்திய சிறைச்சாலை பின்புறமுள்ள சாந்தி நகர், உடையார் காலனி, எம்.டி.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் வெற்றி பெற்றவுடன் மாணவ-மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம் தட்டச்சு பயிற்சி இலவசமாக செய்து தருவதாகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதி அளித்து வாக்காளரிடம் காலில் விழுந்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து வீடு கட்டி வரும் கட்டிட தொழிலாளியுடன் உரையாடிக் கொண்டு அவருடன் கட்டிட வேலை பார்த்தும், ரோட்டுக்கடை உணவகத்திற்கு காய்கறிகளை வெட்டி கொடுத்தும் நூதன முறையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story