குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு: இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு:  இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்திய ராணுவத்தின் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு நடைபெறும். அத்துடன் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தமிழக ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!