கோவை மாணவி தற்கொலை சம்பவத்தை கண்டித்து சேலத்தில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாணவி தற்கொலை சம்பவத்தை கண்டித்து சேலத்தில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்
X

கோவையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சேலத்தில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கோவையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்தசம்பவத்தை கண்டித்து சேலத்தில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்.

கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்த கொண்ட சம்பவத்தை கண்டித்து சேலத்தில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அழகு கலை நிபுணர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.

பாலியல் அத்துமீறல்களால் பறிபோகும் மாணவியரின் உயிர்களை காக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் தொடரும் இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்