சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் நேரில் ஆய்வு

சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் நேரில் ஆய்வு
X

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை தொடர்பாக, சேலம் மாநகராட்சி ஆணையாளர்,  பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்தார்..

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம், கொண்டலாம்பட்டி பகுதிகளில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், இரண்டு நாட்களாக 25க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண்.34 சடகோபன் வீதியில் பாதாள சாக்கடை. அடைப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், அதனை உடனே சரிசெய்ய வேண்டும் என 11.10.2021 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஆணையாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டு சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த பணியையும், பிள்ளையார் கோவில் வீதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பால் சாக்கடை நீர் சாலைகளுக்கு வருவதாகவும், அதனை வெளியேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வரப்பெற்றது. அந்த பகுதியை ஆய்வு செய்த ஆணையாளர், சாக்கடை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காத வகையில் வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, நஞ்சம்பட்டியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து. நுழைவு வாயில் கேட் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வரப்பெற்றது. அந்த மைதானத்தை நன்கு சுத்தம் செய்தும், நுழைவு வாயில் கேட் அமைத்தும் குப்பைகளை கொட்டுவதற்கான குப்பை தொட்டி வைத்து தரப்படும் என்று ஆணையாளர் கூறினார்.

ஆட்டோ காலனி பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், அதனை அப்புறப்படுத்த நிரந்தர வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும் என வரப் பெற்ற மனுவின் அடிப்படையில் அந்த இடத்தை ஆய்வு செய்த ஆணையாளர் தற்காலிகமாக கால்வாய் அமைத்து மழைநீர் வெளியேற்றப்படுவதையும், அந்த பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags

Next Story