நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆலோசனை
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர்/ தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளுதல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பறக்கும் படை அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தபால் வாக்குகளை பெற படிவங்கள் அனுப்பிவைத்தல், வரபெற்ற தபால்களை முறைப்படுத்தி பராமரித்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டன.

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுவது தொடர்பான பயிற்சி மேற்கொள்ளுதல், கட்டுபாட்டு அறைகளின் செயல்பாடு, வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் வரும் பொழுது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநகர நல அலுவலர் யோகானந்த் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அனைத்து நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?