சேலத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

சேலத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு
X

மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

சேலத்தில் நாளை நடக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனோ பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி செய்து கொள்வது அவசியம் என்ற விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஏதுவாக ஏற்கனவே நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நாளை ஐந்தாவது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் இந்த முகாமில் வாயிலாக நாளை ஒரே நாளில் இரண்டு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி முகாம் குறித்த தகவல்களை பொது மக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயம் என்பதை உணர்த்தும் வகையில் அனைவருக்கும் முக கவசங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி சேர்த்துக்கொள்வது அவசியம் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து உணர்ந்து தாமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தினார். சேலத்தில் நாளை நடைபெறும் மெகா முகாமில் 1392 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story