சேலத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை

சேலத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

கொரோனா பரிசோதனை.

சேலத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையாக இன்றைய தினம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் பால், மருந்தகம் தவிர இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பிரதான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ஊரடங்கை மீறி உலாவரும் வாகன ஓட்டிகளை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

மேலும் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு