அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது.
சேலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது ; அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட சேலம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது.
சேலம் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றியுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம் பின்வருமாறு ;
1 வது வார்டு- தமிழரசன் - திமுக
2 வது வார்டு - பன்னீர்செல்வம் - திமுக
3 வது வார்டு-குமரவேல்-திமுக
4 வது வார்டு சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரி சேகர்.( அதிமுகவில் சீட் வழங்கப்படாததால் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்)
5 வது வார்டு-தனலட்சுமி-திமுக
6 வது வார்டு- ராமச்சந்திரன் - திமுக
7 வது வார்டு-சாரதா தேவி- காங்கிரஸ்
8 வது வார்டு -மூர்த்தி -திமுக
9 வது வார்டு - தெய்வலிங்கம்.-திமுக
10 வது வார்டு- ஆர்.சாந்தி-திமுக
11 வது வார்டு-இந்துஜா-திமுக
12 வது வார்டு - சங்கீதா - திமுக
13 வது வார்டு -ராஜ்குமார்-திமுக
14 வது வார்டு- சாந்தமூர்த்தி-திமுக
15 வது வார்டு-உமாராணி - திமுக
16 வது வார்டு-வசந்தா மயில்வேல் - திமுக
17 வது வார்டு-ராஜேஸ்வரி-திமுக
18 வது வார்டு -சக்கரை ஆ.சரவணன்- திமுக
19 வது வார்டு சுயேச்சை வேட்பாளர் தேன்மொழி. ( திமுகவில் கூட்டணி கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டதால் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.)
20 வது வார்டு-பிரதீப்-திமுக
21 வது வார்டு-ஜனார்த்தன் - அதிமுக
22 வது வார்டு- K.C.செல்வராஜ்-அதிமுக
23 வது வார்டு -சிவகாமி-திமுக
24 வது வார்டு -சந்திரா கிருபாகரன்-அதிமுக
25 வது வார்டு-சசிகலா - அதிமுக
26 -வது வார்டு-கலையமுதன்-திமுக
27 வது வார்டு - சவிதா-திமுக
28 வது வார்டு-ஜெயக்குமார் - திமுக
29 வது வார்டு - கிரிஜா குமரேசன் -காங்கிரஸ்.
30 வது வார்டு-அம்சா -திமுக
31 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சையது மூசா.
32 வது வார்டு-பௌமிகா தப்சிரா -திமுக
33 வது வார்டு-ஜெயஸ்ரீ-திமுக
34 வது வார்டு-ஈசன் இளங்கோ-திமுக
35 வது வார்டு -பச்சியம்மாள்-திமுக.
36 வது வார்டு -யாதவமூர்த்தி -அதிமுக.
37 வது வார்டு- திருஞானம்- திமுக
38 வது வார்டு-தனசேகர்-திமுக
39 வது வார்டு மா.ஜெயந்தி- திமுக
40 வது வார்டு -மஞ்சுளா-திமுக
41வது வார்டு -பூங்கொடி- திமுக
42 வது வார்டு- மஞ்சுளா- திமுக
43 வது வார்டு- குணசேகரன்-திமுக
44 வது வார்டு (திமுக கூட்டணியில் )
விடுதலை சிறுத்தைகள் கட்சி - இமயவரம்பன்.
45 வது வார்டு சுகாசினி - திமுக
46 வது வார்டு - மோகனப்ரியா-திமுக
47 வது வார்டு-புனிதா-திமுக
48 வது வார்டு-விஜயா ராமலிங்கம்-திமுக
49 வது வார்டு- மோகனப்பிரியா-- அதிமுக.
50 வது வார்டு-பழனிச்சாமி- திமுக
51 வது வார்டு்-P.L. பழனிசாமி-திமுக
52 வது வார்டு-அசோகன் -திமுக
53 வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி ( திமுக கூட்டணி) ஷாதாஜ்
54- வது வார்டு-க.கனிமொழி--திமுக
55 -வது வார்டு- தனலட்சுமி- திமுக
56 வது வார்டு-சரவணன் -திமுக
57 வது வார்டு-சீனிவாசன்-திமுக
58 வது வார்டு-கோபால்-திமுக
59 வது வார்டு-முருகன்- திமுக.
60 வது வார்டு- வரதராஜ்-அதிமுக வெற்றி.
சேலம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 46 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 வார்டிலும், மனித நேய மக்கள் கட்சி 1 வார்டிலும் என மொத்தம் 50 வார்டுகளை திமுக கைப்பற்றியது.மேலும் அதிமுக -- 7 வார்டுகளிலும், சுயேட்சைகள்- 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் 19 வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் தேன்மொழி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான ராஜேந்திரனை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதன் மூலம் திமுக கூட்டணி 51 வார்டுகளையும், 7 இடங்களை அதிமுகவும் , இரண்டு இடங்களை சுயேட்சையும் கைப்பற்றியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu