சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு ஆலோசனை கூட்டம்

சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு ஆலோசனை கூட்டம்
X

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. 

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு ஆலோசனைக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் தனியார் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய லக்ஷ்மன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்னென்ன பணிகள் மேற்கொள்வது, அதை எவ்வாறு மக்களுக்கு பயன் பெறும் வகையில் கொண்டு சேர்ப்பது குறித்த கருத்துக்களை எடுத்துரைக்கப்பட்டு நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story