தள்ளுபடி பயிர்க் கடன்களை மீண்டும் செலுத்த நிர்பந்தம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.
திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டதன் படி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன்களை மீண்டும் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முறைகேடு என்ற பெயரில் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் பெற்ற பயிர்களை ஏற்கனவே அறிவித்தபடி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் பயிர் கடன் பெறுவதற்காக விவசாயிகள் அடகு வைத்த நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக சேலம் நாமக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு உள் நோக்கம் காரணமாக பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu