விவசாயிகளுக்கு ரூ.15,000 இழப்பீடு: பட்டு வளர்ச்சித் துறை மாநில பேரவை தீர்மானம்
சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில பேரவை கூட்டம்.
தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில பேரவை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் தலைவர் சிவபிரகாசம் கூறும்பொழுது, கடந்த நான்கு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள தமிழகம் முழுவதும் பட்டு வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், ஊழியர் பற்றாக்குறையால் பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தகுதி பெற்ற இளநிலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், பருவமழையின் காரணமாக பட்டு விவசாயியின் தோட்டங்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
பட்டு வளர்ச்சித்துறையில் ஆள் குறைப்பு நடவடிக்கையை தமிழக அரசு ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய உதவி இயக்குனர் அலுவலகம் உருவாக்கிட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பட்டு வளர்ச்சித் துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu