பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 30ம் தேதி இ.கம்யூனிஸ்ட் சைக்கிள் பேரணி

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை ஏறக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் வரி விதிப்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் என்று குற்றம் சாட்டிய முத்தரசன் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற 30ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இலங்கை அரசுடன் இந்திய அரசு நட்புடன் பழகி பல்வேறு உதவிகளை செய்து வந்த போதிலும் தமிழக மீனவர்கள் பற்றி கவலை கொள்வதில்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது என்றும் முத்தரசன் குற்றம்சாட்டினார்.
100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாயத் தொழில்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முத்தரசன் இதுதொடர்பாக அரசு உரிய ஆய்வு நடத்தி நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அறிவாளிகளுக்கு அரசியல்வாதிகளுக்குமே போதிய புரிதல் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மக்கள் பிரச்சனைகள் பற்றி கவலை கொள்ளாமல், தங்களை தற்காத்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவரின் நடவடிக்கைகள் உள்ளது என்றும் முத்தரசன் விமர்சித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu