சேலத்தில் கொரோனா கவச உடைகளை அணிந்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு

சேலத்தில் கொரோனா கவச உடைகளை அணிந்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு
X

 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து நூதன முறையில் மனு அளித்தனர்.

சேலத்தில் கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் இளைஞர்கள் மனு அளித்தனர்.

கொரோனா நோய்த் தொற்றில் தமிழகம் மீண்டு வருவதற்கு முன்பு, மீண்டும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து நூதன முறையில் மனு அளித்தனர்.

இதில் சர்வதேச விமான நிலையத்தை மூடி வெளிநாட்டிலிருந்து வரும் நபர்கள் முழு சோதனைக்கு பிறகே அனுமதிக்க நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் துவக்க நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!