வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை முதல்வர் பெற்றுத்தருவார்: அமைச்சர் கே.என்.நேரு

வன்னியர்களுக்கு 10.5%  இடஒதுக்கீட்டை முதல்வர் பெற்றுத்தருவார்: அமைச்சர் கே.என்.நேரு
X

சேலத்தில் நடைபெற்ற திமுக அவசர செயற்குழுக் கூட்டம்.

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முதல்வர் நிச்சயம் பெற்றுத்தருவார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் பணம் மட்டும்தான்; கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக, ஆட்சியில் இருந்ததால் தற்போது வசதியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து சேலத்தில் 10 தொகுதிகளை கைப்பற்றி உள்ளதாகவும், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்து அந்த வெற்றியை அவர் எட்டியுள்ளதாக தெரிவித்த கே.என்.நேரு தற்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் பெற்றுத் தருவார் என்றார்.

மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகி உள்ளதால் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் தேர்தலை தைரியமாக சந்தியுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு வரும் 11ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 26 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறூப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture