சேலத்தில் மறைந்த வீரபாண்டி ராஜாவின் உருவப்படம் முதல்வர் திறப்பு

சேலத்தில் மறைந்த வீரபாண்டி ராஜாவின் உருவப்படம் முதல்வர் திறப்பு
X

சேலத்தில் மறைந்த வீரபாண்டி ராஜாவின் உருவப்படத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Veerapandi a Raja-சேலத்தில் மறைந்த வீரபாண்டி ராஜாவின் உருவப்படத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உருக்கமான உரையாற்றினார்.

Veerapandi a Raja-முன்னாள் அமைச்சர், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன், மறைந்த வீரபாண்டி ராஜாவின் திருஉருவப்பட திறப்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ராஜாவின் படத்தை திறந்து வைத்தார்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், தேர்தல் பணிக்குழு செயலாளர்களில் ஒருவரான வீரபாண்டி ராஜா கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மாரடைப்பால் இறந்தார். இந்நிலையில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வீரபாண்டி ராஜாவின் திருவுருவப்படத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார். பின்னர் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், எனது தம்பி வீரபாண்டி ராஜாவின் புகைப்படத்தை திறந்து வைத்துள்ளேன். இவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டு அவர் செல்வார் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் திமுக வளர பாடுபட்டவர். இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக, மாவட்ட செயலாளராக சட்ட மன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றிவர் இன்று நம்மிடத்தில் அவர் இல்லை. அவர் படமாக இருக்கிறார்.

வீரபாண்டியாரின் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே புரியவில்லை. அவரது புகழ் நிலைத்து நிற்கும். சேலம் என்று சொன்னால் நினைவுக்கு வருவது வீரபாண்டியார் தான். இதை யாராலும் மாற்ற முடியது. விழாவில் வீரபாண்டி ஆறுமுகம் பற்றி பேசினேன். வீரபாண்டியார் எத்தனையோ நிகழ்ச்சிக்கு என்னை சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் முதலமைச்சராகி நான் வரும்போது அவர் இல்லை.

சேலம் மாநகரம், நகராட்சி, ஊராட்சிகள் கம்பீரமாக நிற்கிறது என்றால் அதற்கு காரணம் அண்ணன் வீரபாண்டியார் தான். என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தியவர் வீரபாண்டியார்.தனி மனிதனாக இல்லாமல் குடும்பமே கழகத்தில் இருந்து பணியாற்றினார். மிசா கொடுமையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது நான் சென்னை சிறையில் இருந்தேன். வீரபாண்டியார் அம்மாவையும், மனைவியையும் கைது செய்தனர். 3 ஆண்டு சேலம் மாவட்டத்தில் நுழைய அவருக்கு தடை போடப்பட்டது. அந்த அளவில் இந்த கழகத்திற்காக உழைத்தவர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவர் மகன்கள் செழியன் மற்றும் ராஜா ஆவர். இவர் போன்றவர்களால் தான் கழகம் கம்பீரமாக நிற்கிறது. இன்று ஆளும் கட்சியாக வளர்ந்து உள்ளது என்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai tools for education