சேலம் மாநகராட்சியில் மேளதாளங்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

சேலம் மாநகராட்சியில்  மேளதாளங்களுடன்  வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
X

சேலம் மாநகராட்சியில் மேளதாளங்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்.

மனுத்தாக்கல் நாளை முடிவடையும் நிலையில் சேலம் மாநகராட்சியில் மேளதாளங்களுடன் வந்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதிமுக, திமுக, பாமக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் திமுக, அதிமுக,தேமுதிக, பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமில்லாமல் சுயேச்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் இன்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சில விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சிலர் மேளதாளங்கள் முழங்க மண்டல அலுவலகங்களுக்கு வருகைதந்த நிலையில் 100 மீட்டருக்கு முன்பாகவே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வேட்பாளர் உட்பட மூவரை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.

இன்றைய தினம் சேலம் மாநகராட்சி பகுதிகளில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டியதால் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்க தொடங்கியது.

Tags

Next Story